• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

10 அடி நீள தோசையை சாப்புடுங்க…பரிசை வெல்லுங்க…

Byகாயத்ரி

Feb 3, 2022

10 அடி நீள தோசையை சாப்பிடுபவருக்கு ரூ. 71 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் என்ற போட்டியை டெல்லி உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உணவுப் பொருட்களை வைத்து போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்தியாவை பொறுத்தவரை நடத்தப்படும் உணவுப் போட்டிகள் பெரும்பாலும் பரோட்டோ, பிரியாணி போன்றதாகவே இருக்கும். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள உணவகம் ஒன்று தோசையை வைத்து சுவாரசியமான போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. டெல்லி டம்மி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக வெளியான பதிவு இணையத்தில் வைரலாகியது. போட்டி என்னவென்றால், 10 அடி நீளமுள்ள தோசையை 40 நிமிடத்துக்குள் முழுமையாக சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டு முடித்தால் ரூ. 71,000 பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கண்டிஷன் என்னவென்றால், போட்டியில் பங்கேற்று முழு தோசையையும் சாப்பிடவில்லை என்றால் தோசையின் விலையான 1,500 ரூபாயை கொடுத்துவிட வேண்டும் என உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டியில் வெல்வது அவ்வளவு எளிதல்ல. இதில் பலர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்களாக பதிவிட்டு வருகின்றனர்.இந்த விஷயம் தற்போது டாப் வைரல்.

https://www.instagram.com/reel/CZLs9UlgiHN/?utm_source=ig_web_copy_link