நாகை மாவட்டம் வேளாங்கண்ணியைச் சேர்ந்த ஆ.பெர்னத் சாமுவேல் ஜான்சன் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.
வேளாங்கண்ணியில் உள்ள ஆயர் சுந்தரம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜான்சன் நினைவு அறக்கட்டளை குருதி கொடையாளர்களை பாராட்டி நினைவு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஜான்சன் நினைவு அறக்கட்டளை நிறுவனர் ஏ.தாமஸ்ஆல்வாஎடிசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வினை வேளாங்கண்ணி பேராலய துணை அதிபர் எஸ்.அற்புதராஜ் துவங்கி வைத்தார். வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி டெங்கு கள பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஜான்சன் நினைவு அறக்கட்டளை உறுப்பினர் மரிய சார்லஸ் வரவேற்றார். ஜான்சன் நினைவு அறக்கட்டளை உறுப்பினர் எஸ்.கந்தையன் நன்றி கூறினார்.