கரூர் மாவட்டம் குளித்தலையில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கோடை105% டிகிரி வரை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க, 60 வயது கூலி பெண் தொழிலாளி தென்னை ஓலையை கையில் சுமந்தவாறு சைக்கிளில் சென்றது.
கரூர் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் 100%,105% அதிகரித்து வருகிறது. ஓரிரு நாட்களில் சித்திரை மாதம் திறக்க உள்ள நிலையில் வெயில் சதத்தை தாண்டி கொளுத்தி வருகிறது.
இதனால் மதிய வேளையில் நகர் பகுதி மற்றும் கிராம பகுதியில் உள்ள வீதிகள் வெறிச்சோடி வருகிறது.
இந்நிலையில் குளித்தலை ஒன்றியம் இனுங்கூர் பஞ்சாயத்து பகுதி காகம் பட்டி காலனி தெருவை சேர்ந்த விவசாயக் கூலி தொழிலாளி கன்னியம்மாள் வயது 60.
இவர் கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க சைக்கிளில் செல்லும்போ,து தென்னை ஓலையுடன் சென்று விட்டு வேலை முடிந்ததும் கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க, தலையில் தென்னை ஓலையை சுமந்தவாறு ஒரு கையில் தென்னை ஓலையையும், மற்றொரு கையில் சைக்கிளையும் பிடித்தவாறு வீட்டிற்கு செல்கிறார்.