• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவையில் ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவான 50 இளைஞர்கள் கண்டுபிடிப்பு

ByA.Tamilselvan

Nov 5, 2022

கோவையில் 50 இளைஞர்கள் ஐ.எஸ் இயக்கத்திற்கு ஆதரவான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை அதிலிருந்து மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோவையில் கடந்த 23-ந் தேதி கார் வெடிப்பு நிகழ்ந்தது. இதில் முபின் என்பவன் உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகியது. அவர் ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவாளராக செயல்பட்டு விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து உளவுத்துறை போலீசார் முபினை போல ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படும் இளைஞர்கள் உள்ளனரா? என்று தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் கோவை மாவட்டம் முழுவதும் 50 இளைஞர்கள் ஐ.எஸ். இயக்கத்தின் கருத்துக்களுக்கு ஈர்க்கப்பட்டு அவர்களுக்கு ஆதரவாக இருப்பது தெரியவந்தது.
இது குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசும்போது தவறான பாதையில் செல்லும் இளைஞர்களை அதில் இருந்து மீட்டு கொண்டு வருவது, தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற கருத்துக்களை போதிக்க உள்ளோம். மேலும் அவர்களுக்கு உலாமாக்கள் மூலம் நல்ல கருத்துக்களை போதித்து, அவர்களை நல்ல ஒரு குடிமகனாக மாற்றும் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். விரைவில் இதனை மேற்கொள்வோம்.என்றார்.