• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தொடர் மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழை காரணமாக புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கியது. எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்தது. அதைபோல சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்த நிலையில், தொடர் மழை காரணமாக புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 967 கனஅடியாகவும், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 66 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.