• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆகிறார் கனிமொழி..!

ByA.Tamilselvan

Oct 7, 2022

திமுக மகளிருக்கான துணைப்பொதுச்செயலாளர் பிரதிநிதித்துவ அடிப்படையில் கனிமொழி எம்பி தேர்வு செய்யப்படுகிறார்
திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த செப்டம்பர் மாதம் 20-ம் தேதி, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அந்தப் பதவிக்கு, தூத்துக்குடி தொகுதி எம்பியும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி தேர்வு செய்யப்படுகிறார்.
நாளை மறுநாள் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில், மகளிருக்கான துணைப்பொதுச்செயலாளர் பிரதிநிதித்துவ அடிப்படையில் இந்தப் பதவிக்கு கனிமொழி எம்பி தேர்வு செய்யப்படுகிறார். திமுகவின் மகளிர் அணி செயலாளராக உள்ள கனிமொழி, புதிய நிர்வாகியை தேர்ந்தெடுக்கும் வரை மகளிர் அணி பொறுப்பையும் கவனிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.