• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வாட்ஸ் அப்-ன் அசத்தலான புதிய அப்டேட்… பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு..!!

Byகாயத்ரி

Oct 6, 2022

பயனாளர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில், இனி வாட்ஸ் அப்-பில் அனுப்பும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பயனர்கள் ஸ்கிரீன்ஷாட் அல்லது பதிவு செய்ய இயலாத புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

அதாவது, ஒருவர் புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ அனுப்பும்போது, ‘View Once’ என்ற ஆப்ஷனை வைத்து அனுப்ப முடியும். இதனால், அந்த மெசேஜை பெறுபவர், வீடியோ அல்லது புகைப்படத்தை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். அந்த புகைப்படமோ அல்லது வீடியோவோ போனிலும் பதிவாகாது. ஆனால் அவற்றை ஸ்கிரீன்ஷாட் அல்லது ஸ்கிரீன் ரெக்கார்டிங் மட்டும் செய்துகொள்ளும் வசதி இருந்தது. கடந்த ஆண்டே இந்த வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இனி ‘வியூ ஒன்ஸ்’ புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட்டோ, வீடியோக்களை ஸ்கிரீன் ரெக்கார்டிங்கோ செய்ய முடியாத வகையில் புதிய வசதி அறிமுகமாக இருக்கிறது. இந்த அம்சத்தை எப்போது பயன்படுத்த முடியும் என்று அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. அத்துடன் இந்த புதிய வசதியில் சிறப்பம்சம், View Once வசதியில் அனுப்பப்பட்ட புகைப்படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முயன்றால், அது கருப்பாக மாறிவிடும் என்று கூறப்பட்டுள்ளது.