• Thu. Apr 25th, 2024

17-ந்தேதி தமிழக சட்டசபை கூட வாய்ப்பு

ByA.Tamilselvan

Oct 6, 2022

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17-ந்தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை 4 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைக்கான சட்ட மசோதா கொண்டுவரப்படுமா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கை இறுதி நாளில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூடுவதற்கான அறிவிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *