• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

24 நேரமும் பொதுமக்களுக்கு என் வீட்டில் இடமுண்டு… லெஜண்ட் சரவணனின் ட்வீட்..!

Byகாயத்ரி

Oct 6, 2022

சரவணா ஸ்டோர்ஸ் என்றாலே நம் நினைவுக்கு வருபவர். லெஜண்ட் சரவணன். இவர் தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் தடம் பதித்து அறிமுகம் ஆகிவிட்டார்.

எல்லோர் மத்தியிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை, ஆனாலும் வசூலில் ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது. எப்போதுமே ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் லெஜண்ட் சரவணன் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்கிறார். இந்நிலையில், தற்போது அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் 24 மணி நேரமும் அன்ன தானம் நடைபெறுகிறது என்றும் தன்னுடைய சொந்த வீட்டில் பொது மக்களுக்கு இடம் எப்போதும் உண்டு என்றும் கூறி பதிவுசெய்துள்ளார் லெஜண்ட் சரவணன்.இந்த ட்வீட் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த மனசு தான் சார் வேணும் என்று பலரும் கமென்ட் டெய்து வருகின்றனர்.