• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை தொடங்கியது

ByA.Tamilselvan

Oct 5, 2022

விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று ஒரு ஆசிரியராவது பள்ளிக்கு வந்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தனியார் பள்ளிகளில் விஜயதசமி அன்று போட்டி போட்டுக்கொண்டு மாணவர் சேர்க்கை மேற்கொள்ளும் நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இன்று மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதை பெற்றோர் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொடக்கக்கல்வி சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.