• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தூய்மையான நகரங்களின் பட்டியல் வெளியீடு…

Byகாயத்ரி

Oct 4, 2022

மத்திய அரசின் நகர்ப்புற அமைச்சகம் இந்தியாவின் தூய்மையான 45 நகரங்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டது. இதில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் முதலிடத்தையும், சூரத் இரண்டாவது இடத்தையும், நவிமும்பை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. தமிழகத்திலுள்ள நகரங்களான கோவை 42வது இடத்தையும், சென்னை 44வது இடத்தையும், கடைசி இடமான 45வது இடத்தை மதுரையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016 ஆம் ஆண்டு பட்டியலில் திருச்சி மூன்றாவது இடத்தையும், கோவை 18 ஆவது இடத்தையும், மதுரை 26 வது இடத்தையும், சென்னை 34 வது இடத்தையும் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.