• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

நீலகிரி எம்.பி ஆ.ராசா.. நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு..!

ByA.Tamilselvan

Sep 28, 2022

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், ஊட்டியில் திமுகவின் கட்சி கொடியேற்றும் விழா நடக்க இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சிகளில் திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ.ராசா கலந்துகொள்ள இருப்பதாகவும் மாவட்ட திமுக சார்பில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, திமுக நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்து வந்தனர். இதற்காக ஆ.ராசா 2 நாள் பயணமாக நீலகிரி வருவதாக இருந்தது. . இந்த நிலையில் ஆ.ராசா தனது 2 நாள் நீலகிரி சுற்றுப் பயணத்தை திடீரென ஒத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்து மற்றொரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திமுக துணை பொதுசெயலாளர் ஆ.ராசா, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அவர் கோவை வழியாக நீலகிரி செல்லும் வழியில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் ஆ.ராசா நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.