• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பி.எப்.ஐ.க்கு அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை

ByA.Tamilselvan

Sep 28, 2022

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பதற்கும் பயிற்சி முகாம்களை நடத்தியதாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா எதிரான வழக்கு தொடர்பாக தெலங்கானா, ஆந்திரா, உள்பட நாடு முழுவதும் தேசிய புலனாய்வு நிறுவனம் கடந்த 22ந் தேதி சோதனையில் ஈடுபட்டது.
தமிழகத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டன. 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறையும் இணைந்து சோதனை நடத்தின. இந்த சோதனைகளின் போது பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன. மேலும் அந்த அமைப்பைச் சேர்ந்த மொத்தம் 247 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பி.எப்.ஐ.(பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா) அமைப்பு இந்தியாவில் செயல்பட ஐந்து ஆண்டு காலம் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உடனடியாக அமலுக்கு வரும் இந்த தடை உத்தரவு அதன் துணை அமைப்புகளுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.