தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர காய்ச்சல் காரணமாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சோதனை செய்தததில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுளளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு, ஓய்வில் இருக்கிறார்.