• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பல்லடம் அருகே நவீன எரியூட்டு மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு

ByS.Navinsanjai

Sep 15, 2022

பல்லடம் அருகே நவீன எரியூட்டு மயானம் அமைப்பதற்கு நில அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்டது பச்சாபாளையம்.இங்கு 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.பச்சாபாளையத்தில் உள்ள மயானத்தில் நவீன எரியூட்டு மயானம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.ஆரம்பம் முதலே அப்பகுதி பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இன்னிலையில் மயானத்தை அளவீடு செய்ய அரசு பணியாளர்கள் சென்றனர்.தகவல் அறிந்து அங்கு வந்த பொதுமக்கள் நில அளவீடு செய்யும் பணியை தடுத்து நிறுத்தினர்.
இதனை அடுத்து பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம்,தாசில்தார் நந்தகோபால்,காவல் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.நில அளவீடு செய்யும் பணிக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் பகுதியில் நவீன எரியூட்டு மின் மயானம் அமைக்க கூடாது எனவும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய அதிகாரிகள் இதுகுறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு பின்பு முடிவெடுக்கப்படும்,எனவும் தற்காலிகமாக அளவீடு பணி நிறுத்தப்படும் என உறுதி கூறியதை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் கலந்து சென்றனர்.அரசு அதிகாரியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.