• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தபால்துறையில் வேலை..!

Byவிஷா

Sep 10, 2022

இந்திய தபால் துறையில் தேர்வுகள், பட்டப்படிப்புகள் எதுவுமின்றி திறமையின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1) நிறுவனம் :

இந்திய தபால் துறை

2) வேலைவகை :

மத்திய அரசு (நிரந்தரம்)

3) காலி பணியிடங்கள் :

மொத்தம் 19

4) பணி :

டிரைவர்

5) பணிக்கான தகுதிகள் :

  • மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கனரக, இலகுகரக வாகனங்கள் ஓட்டுவதற்கான அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.
  • குறைந்தது 3 வருடங்கள் கனரக, இலகுகரக வாகனங்களை ஒட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6) வயது வரம்பு :

பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வரை இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்க்கப்படும், ஓபிசி பிரிவனருக்கு 3 ஆண்டுகள் வரை வயது தளர்வு அளிக்கப்படும்.

7) தேர்வு செய்யப்படும் முறை :

நேர்முகத்தேர்வு மற்றும் எழுத்து தேர்வுகள் எதுவுமின்றி விண்ணப்பதாரர் வாகனம் ஓட்டும் திறமையை வைத்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

8) விண்ணப்பிக்கும் முறை :

தபால் துரையின் ட்ரைவர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் indiapost.gov.in. என்கிற அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து அதில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

9) விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

Manager,
Mail Motor Service,
Bangalore-560001.
10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :

செப்டம்பர் 26, 2022