• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆடல் ,பாடல் நிகழ்ச்சிகளுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

ByA.Tamilselvan

Sep 8, 2022

கோவில்களில் திருவிழாக்களை முன்னிட்டு இரவு நேரத்தில் ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சிக்கு அனுமதிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. விசாரணை நடத்தி நீதிபதி சக்திகுமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ அல்லது அநாகரிகமான உரையாடல்களோ இருக்கக்கூடாது. எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்க கூடாது. எந்த அரசியல் கட்சி அல்லது மதத்துக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது. சாதி அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது இரட்டை அர்த்த பாடல்கள் இடம் பெறக்கூடாது. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ , மதுபானத்தையோ உட்கொள்ளக்கூடாது ,பொதுமக்களுக்கு அல்லது போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது. நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளார்.