• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இனி கார் பின்சீட்டில் அமர்வோருக்கும் சீட் பெல்ட் கட்டாயம்..

Byகாயத்ரி

Sep 7, 2022

இந்தியாவில் வாகன விபத்தில் 1.73 லட்சம் பேர் கடந்த ஆண்டில் உயிரிழந்துள்ளதாக சமீபத்தில் ஒரு ஆய்வில் தகவல் வெளியானது.

இதுகுறித்து, நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் 10-ல் 7 இந்தியர்கள் காரில் பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிவதில்லை என்று தெரியவந்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பு இந்தியாவின் 274 மாவட்டங்களில் நடத்தப்பட்டது. அதன்படி, 26 % பேர் மட்டுமே பின்பக்க இருக்கையில் அமரும் போது சீட் பெல்ட் அணிவது வழக்கம். 10,000 பேரில் 70 சதவீதம் பேர் பின்பக்க இருக்கையில் அமரும்போது சீட் பெல்ட் அணிவதில்லை. 4 சதவீதம் பேர் பின்பக்க இருக்கையில் அமர்ந்து பயணிப்பதில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, காரின் பின் சீட்டில் அமர்வோருக்கும் சீட் பெல்ட் கட்டாயம் என்றும் மீறினால் அபராதம் விதிக்கும் சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்று டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்து நிகழ்வு குறித்த கேள்விக்கு அவர் தெரிவித்துள்ளார்.