• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!

Byவிஷா

Aug 12, 2022

தமிழ்நாட்டில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 12) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,890 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,885 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 39,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 40 ரூபாய் உயர்ந்து 39,120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதே போன்று தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று 5,287 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 5,292 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று 42,296 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 40 ரூபாய் உயர்ந்து 42,336 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று 64.20 ரூபாயாக இருந்தது. இன்று அது ரூ.64 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 64,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.