• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பில் அரசு பள்ளி மாணவிகள் சாதனை

ByA.Tamilselvan

Aug 5, 2022

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பு பணியில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ளனர்.
. இஸ்ரோவின் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ சார்பில் இப்பள்ளியின் 10 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ‘ஆர்டினோ ஐ.இ.டி சாஃப்ட்வேர்’ தொழில்நுட்பத் துடன் ‘வான்வெளி உயரம், தட்பவெப்பம், ஈரப்பதம்’ ஆகியவற்றை உள்ளடக்கிய புரோகிராமை இப்பள்ளி மாணவிகள் வெற்றிகரமாக செய்துமுடித்தார்கள் .இதனையறிந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அப்பள்ளிக்கு சென்று மாணவிகளை பாராட்டினார். மாணவி களுக்கு புத்தகங்களை பரிசளித்தார் அம்மாணவிகளையும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் சந்தித்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். 10 மாணவிகளும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஸ்ரீகரி கோட்டா இஸ்ரோ மையத்திற்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருக்கிறார்கள்.