• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

காமராஜர் பிறந்தநாள்விழா..3000 மாணவர்கள் பங்கேற்ற மினிமாரத்தான்…

Byvignesh.P

Jul 15, 2022

காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேனி நகரில் செயல்பட்டு வருகின்ற தனியார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பள்ளி வளாகத்தில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

இந்த மினி மாரத்தான் ஓட்ட நிகழ்ச்சியை உறவின்முறை பொது தலைவர் ராஜ்மோகன் கொடியசைத்து துவக்கி வைக்க, 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 850பேரும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் 1100 க்கும் மேற்பட்டவர்களும் 750 மாணவிகளும் என மொத்தம் 3000க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் ஓட்டம் இதுவாகும். இந்த மினி மாரத்தான் ஓட்ட நிகழ்ச்சியில் உறவின்முறை பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், நிர்வாக குழு உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள் ,மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.