• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

என்னடா இது சூப்பர் ஹீரோவுக்கு வந்த சோதனை… சோனு சூட் ரசிகர்கள் அதிர்ச்சி!

By

Sep 15, 2021 , ,

கொரோனா லாக்டவுன் நேரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏழை தொழிலாளிகளுக்கு உதவி இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்தவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். ஏழை மாணவர்கள், விவசாய குடும்பங்கள் என என சமூக வலைதளங்கள் மூலம் தனக்கு வரும் அனைத்து உதவிகளையும் அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.

இதனால் சினிமாவில் வில்லனாக நடித்தாலும் மக்கள் மனதில் சூப்பர் ஹீரோ அளவிற்கு உயர்ந்தார். சோனு சூட்டின் செயலைப் பாராட்டி ஐக்கிய நாடுகளின் சபை கூட, சிறந்த மனிதநேயமிக்க விருதை வழங்கி கவுரவித்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் நடிகர் சோனு சூட் வீடு உள்பட அவருக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.