• Mon. Apr 29th, 2024

அவசர அப்டேட் கொடுத்த ஆப்பிள்

By

Sep 14, 2021
  1. ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களில் ஸ்பைவேரைத் தடுக்கவும், பாதுகாப்பை மேலும் பலப்படுத்த அவசர பாதுகாப்பு அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு ஐபோன், ஐபாட், மேக் மற்றும் ஆப்பிள் வாட்சையும் பாதிக்கும் Zero day பாதிப்புக்கான, பாதுகாப்பு புதுப்பிப்புகளை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிட்டிசன் ஆய்வகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் ஒரு குறைபாட்டைக் கண்டறிந்த பிறகு பயனர்கள் தங்கள் சாதனங்களை உடனடியாக புதுப்பிக்குமாறு நிறுவனம் வலியுறுத்துகிறது.

சிட்டிசன் ஆய்வகம் தனது கண்டுபிடிப்புகளை ஆப்பிள் நிறுவனத்திற்கு செப்டம்பர் 7-ல் தெரிவித்ததாகக் கூறியது.
சிட்டிசன் ஆய்வகத்தின் சமீபத்திய கண்டுபிடிப்புகளில், சவுதி ஆர்வலரின் ஐபோனில் ஃபோர்செட் என்ட்ரி ஹேக் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்ததாகக் கூறியது.டிஸ்ப்ளேவில் ஆப்பிள் சாதனங்கள் எவ்வாறு படங்களை வழங்குகின்றன என்பதில் உள்ள பலவீனத்தை ஸ்பைவேர் பயன்படுத்திக் கொள்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

சிட்டிசன் ஆய்வகம் இப்போது அதே ஃபோர்செட்என்ட்ரி ஸ்பைவேர் அனைத்து ஆப்பிள் சாதனங்களிலும் செயல்படுவதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக,ஐ-மெசேஜ் மூலமாக ஐபோன் பயன்படுத்துவோரை குறிவைத்து பெகாசஸ் மென்பொருள் பரப்பப்பட்டு,உளவு பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. அதாவது, பயனரின் அனுமதி இல்லாமல்,அவரின் ஐபோனில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் உளவுப்பார்க்கப்படும்.

இஸ்ரேலிய NSO குழுவின் பெகாசஸ் மென்பொருள் தனது வாடிக்கையாளர்களுக்கு,அவரின் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட ஐபோன் சாதனத்தின் தனிப்பட்ட தரவு, புகைப்படங்கள், செய்திகள் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட முழுமையான அணுகலை வழங்குகிறது.

இதன்காரணமாகவே,ஆப்பிள் தனது பயனர்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த தற்போது அவசர பாதுகாப்பு அப்டேட்டை (iOS 14.8) வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *