• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை அரசு மருத்துவமனையில் உணவகம் துவங்கிய நடிகர் சூரி..

Byகாயத்ரி

Jun 25, 2022

மதுரை அரசு மருத்துவமனையில் நடிகர் சூரி துவங்கியுள்ள உணவகத்தை தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாராஜன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் இந்திராணி, டீன் ரத்தினவேல் மற்றும் நடிகர் சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூரி, மருத்துவமனையில் தனது உணவகம் திறக்கப்பட காரணம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்தான் எனக்கூறி அவருக்கு நன்றி தெரிவித்தார். படங்கள் குறித்து பேசிய அவர், விடுதலை படம் பெரும்பகுதி நிறைவடைந்து விட்டது. படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும். சமீபத்தில் ரிலீஸான படங்கள் பெற்ற அதே வெற்றியையும், மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் அளிக்கும்.இயக்குநர் வெற்றிமாறன் மிகவும் மெனக்கெட்டு உள்ளார்.

விடுதலை படத்தில் நான் இருப்பதே எனக்கு பெருமையாக உள்ளது. விஜய் சேதுபதியும் படத்தில் இருப்பதால் இதற்கு தனி அந்தஸ்து கிடைத்து விட்டது. இந்தியாவிலேயே முக்கியமான படமாக விடுதலை இருக்கும் என்றார்.