• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இரண்டாவது திருணத்திற்கு தயாராகிறாரா சீரியல் நடிகை ரச்சிதா..?

Byவிஷா

Jun 19, 2022

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி தொடரை யாராலும் மறக்கவே முடியாது. அந்த தொடரின் இரண்டாவது பாகத்தில் இருந்து மீனாட்சியாக நடித்து வந்தவர் ரச்சிதா.
அந்த சீரியல் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ரச்சிதா விஜய் தொலைக்காட்சியில் கடைசியாக நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்தார். பின் சீரியலில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என வெளியேறினார். தற்போது கலர்ஸ் தமிழில் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வருகிறார். நடிகை ரச்சிதா தன்னுடைய முதல் தொடரில் நடித்த தினேஷ் என்பவரை காதல் திருமணம் செய்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இப்போது அவர்களது திருமண வாழ்க்கை பிரச்சனையில் முடிய விவாகரத்து வரை சென்றுவிட்டார்கள் என கூறப்படுகிறது.
இந்த நேரத்தில் தான் வேறொரு செய்தியும் வைரலாகிறது. ஒரு இயக்குனருடன் அவருக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடைபெறப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.