• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இந்திய நாட்டிடம் பெற்ற நிதி உதவியின் அளவு அந்நாட்டின் எல்லையை நெருங்குகிறது- ரணில் விக்ரமசிங்கே

Byகாயத்ரி

Jun 9, 2022

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எரிபொருட்கள் வாங்குவதற்கு இந்திய நாட்டை தவிர வேறு எந்த நாடும் நிதியுதவி தருவதில்லை என்று கூறியிருக்கிறார்.

இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மேலும் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் அதிபர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அதைத்தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்று பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் உலக நாடுகளிடம் நிதி உதவி அளிக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் கோரப்பட்ட கடனும் தற்போது வரை இலங்கைக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில், இந்தியா மட்டும் மருந்து பொருட்கள், எரிபொருட்கள் உட்பட சுமார் 27 ஆயிரம் கோடி ரூபாய் இலங்கைக்கு வழங்கியிருக்கிறது. இதனிடையே இலங்கையை சேர்ந்த அரசு மின் வினியோக அமைப்பை சேர்ந்த பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக தகவல் வெளியானது. எனவே, நாடாளுமன்றத்தில் இது பற்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது, நீங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம். ஆனால் தடையை ஏற்படுத்தி விடாதீர்கள். நீங்கள் அப்படி செய்தால் இந்திய நாட்டிடம் உதவி கேட்குமாறு என்னிடம் கூறாதீர்கள். நமக்கு, நிலக்கரி, எரிபொருள் வாங்குவதற்கு எந்த நாட்டிலிருந்தும் நிதி உதவி கிடைக்கவில்லை.

இந்தியா மட்டும் தான் நிலக்கரியும், எரிபொருளும் வாங்குவதற்கு நிதி உதவி அளிக்கிறது. இந்திய நாட்டிடம் நாம் பெற்ற நிதி உதவியின் அளவு அந்நாட்டின் எல்லையை நெருங்கி இருக்கிறது. நம் நாட்டிற்கு இந்தியா மட்டுமே தொடர்ந்து நிதியுதவிகளை அளித்துக் கொண்டே இருக்க முடியாது. அந்நாட்டை சேர்ந்த சிலர் இலங்கைக்கு ஏன் நாம் உதவி செய்ய வேண்டும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். முதலில் அவர்கள் உதவி செய்வதற்கு முன்பாக நமக்காக நாம் உதவி செய்ய வேண்டும் என்று கேட்கிறேன் என்று கூறியிருக்கிறார்.