• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இ-ஸ்கூட்டர்கள் விபத்து… நடக்கலாம் நடக்காமலும் போகலாம்..

Byகாயத்ரி

May 13, 2022

எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஓலா எலெக்ட்ரிக் மட்டும் தான். மற்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடிக்கடி வெடித்து சிதறும் நிலையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது ஸ்கூட்டரை அறிமுகம் செய்வதற்கு முன்பே அதிக பிரிபலம் அடைந்துவிட்டது.

சமீப காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ பிடிக்கும் நிகழ்வுகள் அதிகளவில் அரங்கேறி வருகின்றன. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுக்கும் வகையில், இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடிப்பது பற்றி ஓலா எலெக்ட்ரிக் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார். அதன்படி, “புதிய ஆட்டோமொபைல் பிரிவில் எலெக்ட்ரிக் வாகன தீ விபத்துக்கள் மிக எளிதில் பலரின் கவனத்தை ஈர்த்து விடுகிறது,” என்று பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். எலெக்ட்ரிக் வாகன தீ விபத்துக்களை அடுத்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் பேசி இருந்தார் என தகவல் வெளியாகி உள்ளது. “எதிர்காலத்திலும் இதே போன்று நடக்கும், ஒரு வேளை நடக்கலாம். ஆனால் வாகனத்தின் அனைத்து பிரச்சினையையும் கவனித்து சரி செய்வது தான் எங்கள் குறிக்கோள். ஏதேனும் பிரச்சினை இருந்தால், அதனை உடனே சரி செய்து விடுவோம். சிறு பிரச்சினைகள் காரணமாக எதிர்காலத்திலும் இ ஸ்கூட்டர்களில் தீ விபத்து ஏற்படும். சாலைகளில் வலம் வரும் 50 ஆயிரம் ஓலா இ ஸ்கூட்டர்களில் ஒன்று தான் வெடித்து இருக்கிறது,” என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.