• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் பரபரப்பு.. பட்டபகலில் இளைஞர் வெட்டிக்கொலை!

சிவகங்கையில் இளைஞர் ஒருவரை பட்டப்பகலில் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அருகே ஒக்கூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சரத்குமார். இவர் நேற்றிரவு 11 மணி அளவில் ஒக்கூர் சந்தையில் குடிபோதையின் காரணமாக கேசவன்,ருத்திரன் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கேசவன் மற்றும் ருத்ரன் ஆகியோர் சரத்குமாரை பழி தீர்க்க முடிவெடுத்தனர். அதற்காக அவரை பின்தொடர்ந்து வந்த இருவரும், இன்று மதியம் அண்ணாநகரில் நின்று கொண்டிருந்த சரத்குமாரை அரிவாளால் சரமாரியாக  வெட்டினர்.

இந்த கொடூர தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சரத்குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே குற்றவாளிகளான கேசவன், ருத்ரன் இருவரும்  மதகுபட்டி காவல்நிலையத்தில் சரணடைந்தனர். இதற்கிடையே கொலை செய்யப்பட்ட சரத்குமாரின்  உடலை மீட்ட  போலீஸார்  உடற்கூறு ஆய்விற்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.