• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ByA.Tamilselvan

Apr 28, 2022

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்கங்களின் சார்பாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மாவட்ட அளவிலான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலத் தலைவர் சார்லஸ் ரங்கசாமி கோரிக்கை விளக்க உரையாற்றினார். ஆர்பாட்டத்தில் ஊராட்சியில் பணியாற்றி வரும் கிராம ஊராட்சி மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் எண் 20 மூலம் பணியாளர்கள் ஏற்கனவே பெற்று வந்த ஊதியத்தை விட 850 ரூபாய் குறைவாக ஊதியம் பெற வேண்டியுள்ளது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்து திருத்தப்பட்ட புதிய ஊதிய உயர்வு அரசாணையை வெளியிட வேண்டும், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான மாத ஊதியம் நிர்ணயித்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அருவருக்கத்தக்க பணிகளை கடும் அல்லல்களோடு செய்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு தற்போது 3500 மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. கூலி தொகையான 273 கணக்கிட்டு மாதம் பத்தாயிரம் வழங்க வேண்டும் . ஊரக உதவி இயக்குனர் நிலையிலான பதவி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.