• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல்

விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா இணைந்து நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் நேற்றுவெளியானது.செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இப்படத்தை, தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரித்துள்ளார்.‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, S.R.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஶ்ரீகர் பிரசாத் படத் தொகுப்பு செய்துள்ளார்.இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.நேற்று வெளியாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது,முன்னதாக இப்படத்திலிருந்து வெளியிடப்பட்ட டீசர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியான ‘டூ டூடூ டூ டூடூ’ பாடல், ‘ரெண்டு காதல்’, ‘நான் பிழை’ போன்ற பாடல்கள் பல மில்லியன் பார்வைகள் குவித்து, சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘டிப்பம் டப்பம்’ சிங்கிள் பாடலும் அனைவர் மனதை கவர்ந்த பாடலாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் வரும் 2022 ஏப்ரல் மாதம் 28-ம் தேதி, உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.