• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தாரா ?

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊரடங்கையும் மீறி எதிர்க்கட்சியினர்நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கிடையே பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே, ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.நம் அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.பெட்ரோல் – டீசல், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுதும் தொடர்ந்து பல மணி நேரங்கள் மின் வெட்டு ஏற்படுகின்றன. இதனால் குழப்பமான சூழல் நிலவுகிறது.கொதிப்படைந்த மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டு முன் சமீபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த 1ம் தேதி நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரநிலையை பிரகடனம் செய்து அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டார்.இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. நேற்று முன்தினம் நாடு தழுவிய போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

இதை ஒடுக்குவதற்காக இலங்கை முழுதும் நேற்று முன் தினம் மாலை 6:00 மணி முதல் இன்று காலை 6:00 மணி வரை 36 மணி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.664 பேர் கைதுஊரடங்கு நேரத்தில் மக்கள் பொது இடங்களுக்கு வருவதை தவிர்க்கும்படி அதிபர் அறிவித்தார். ஊரடங்கை மீறி போராட்டம் நடத்த எதிர்கட்சியினர் திட்டமிட்டனர். இதையடுத்து, ‘பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்’ உள்ளிட்ட அனைத்து சமூகவலைதளங்களும் முடக்கப்பட்டன.இந்நிலையில் பிரதான எதிர்கட்சியான எஸ்.ஜே.பி., எனப்படும் சமகி ஜன பாலவேகயா கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தை நோக்கி எதிர்கட்சியினர் ஊர்வலம் நடத்தினர்.

அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி கையில் பதாகைகளை ஏந்தி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.இலங்கையில் மேற்கு மாகாணத்தில் ஊரடங்கை மீறிய 664 பேரை போலீசார் கைது செய்தனர்.”போராட்டம் நடத்தும் பொதுமக்களின் உரிமையை மறுக்கும் வகையில், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தை அரசு தவறாகப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,” என, சமகி ஜன பாலவேகயா கட்சியை சேர்ந்த எம்.பி.,யும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.ஊரடங்கை மீறி, கண்டி நகரில் ஏராளமான மாணவர்கள் அரசுக்கு எதிராக நேற்று போராட்டம் நடத்தினர். தண்ணீரை பீய்ச்சி அடித்து, போலீசார் அவர்களை கலைத்தனர்.இதற்கிடையே கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, 14 மணி நேரத்துக்குப் பின் சமூக வலைதளங்கள் நேற்று மாலை முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன. இன்று இலங்கையின் சில மாகாணங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்க மறுப்புஇதுகுறித்து இலங்கை அரசு தரப்பில் கூறப்பட்டதாவது:சமீபத்தில் அதிபர் வீட்டுக்கு முன் நடந்த போராட்டத்தின் போது, தனியார் மற்றும் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.

பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதுபோன்ற காரணங்களுக்காகவே, அவசரநிலை, ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அரசு தரப்பில் கூறப்பட்டது.இதற்கிடையே, இலங்கையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது, மனித உரிமை மீறல் என, இலங்கை மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘தேசிய பாதுகாப்புக்கு எந்த வகையில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தாமல், அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது’ என, மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று, பிரதமர் மகிந்த ராஜபக்சே, தன் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக தகவல் வெளியானது.

இது குறித்து இலங்கை அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:தற்போது எழுந்துள்ள நெருக்கடியிலிருந்து தன் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவின் பதவியை காப்பாற்றும் வகையில், மகிந்த ராஜபக்சே, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அதிபர் கோத்தபய, அவரது ராஜினாமாவை ஏற்க மறுத்து விட்டார்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.விமான சேவையைகுறைத்தது ‘ஏர் – இந்தியா!’இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இந்தியா – இலங்கை இடையிலான விமானங்களின் எண்ணிக்கையை ‘ஏர் – இந்தியா’ குறைத்துள்ளது.இது குறித்து ‘ஏர் – இந்தியா’ விமான நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை:இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வாரத்திற்கு 16 விமானங்களை ஏர் – இந்தியா இயக்கி வருகிறது. டில்லியில் இருந்து ஏழு விமானங்களும், சென்னையில் இருந்து ஒன்பது விமானங்களும் இயக்கப்படுகின்றன.தற்போது பயணியர் எண்ணிக்கை குறைந்துள்ளதை அடுத்து, டில்லியில் இருந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை ஏழில் இருந்து நான்காக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலைமை சீராகும் வரை இனி, இலங்கைக்கு வாரத்திற்கு 13 விமானங்களை மட்டுமே ஏர் – இந்தியா இயக்க உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.