• Mon. Apr 29th, 2024

மணிப்பூரை ‘’கை’’ விட்ட காங்கிரஸ் ?

இரண்டு கட்டமாக பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் நடந்துமுடிந்த மணிப்பூர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகின்றது.

அதில் தற்போதைய நிலவரப்படி பாஜக 26 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது.
மணிப்பூரில் 89.3% வாக்காளர்கள் வாக்கு செலுத்தியிருந்த நிலையில், இன்று அங்கு வாக்கு எண்ணிக்கை நடந்து வருகின்றது. அதன்படி பாஜக 26 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும், என்.பி.பி. 13 இடங்களிலும், பிற கட்சிகள் 11 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மொத்தம் 60 தொகுதிகள் உள்ள மணிப்பூரில், பாஜக முன்னிலை வகிக்கின்றது. இருப்பினும், ஆட்சியமைக்க தேவையான இடங்கள் இன்னும் பாஜகவுக்கு கிடைக்கவில்லை. முன்னதாக தேர்தல் கருத்து கணிப்பில் மணிப்பூரில் பாஜக பெருவாரியாக விரிவடைந்து ஆட்சியை பிடிக்குமென கணிக்கப்பட்டிருந்து.

அதற்கேற்றார் போல தற்போது நடக்கிறது. இருப்பினும் அவர்களுக்கு ஆட்சியமைக்கும் அளவுக்கான இடங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்பதால், 5 கட்சிகளுடன் கூட்டணியிலுள்ள காங்கிரஸ் இப்போதுவரை தங்களுக்கான வாய்ப்பு அதிகமிருப்பதாகவே கருதுகின்றது. இதை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சியினர், `தற்போது மணிப்பூரில் பைரன் சிங் தலைமையில் நடைபெறும் பாஜக, மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுப்போம்’ என்று நம்பிக்கை தெரிவித்தும் வருகின்றனர்.

கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலேயும் மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்றது இங்கு நினைவு கூறத்தக்கது. ஆனால் அப்போது சாமர்த்தியமாக செயல்பட்ட பாரதிய ஜனதா கட்சி, அங்கிருந்த சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மாநிலத்தில் ஆட்சி அமைத்தது. அதுபோன்ற ஒரு நிலை இந்த முறை ஏற்படாமல் இருக்கவும், எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவலில் ஈடுபடாமல் இருக்கவும் தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சி தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் பிரமாண பத்திரத்தில் `வெற்றி பெற்றவுடன் பிற கட்சிக்கு செல்ல மாட்டேன்’ என கையெழுத்து வாங்கியுள்ளது. மேலும் ஒவ்வொரு வேட்பாளரிடமும் அவர்களுக்கு இஷ்டமான தெய்வத்தின் பெயரில் சத்தியமும் பெறப்பட்டது பெரும் சுவாரஸ்யமாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *