• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய ரோஜா …

Byகாயத்ரி

Mar 9, 2022

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையும், ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா தமிழ் புத்தகங்களை ஆந்திர தமிழக எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளிக்கூட மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து முதல்வரும் புத்தகங்களை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக அளித்தார். இந்நிலையில் நடிகை ரோஜா, ஸ்டாலினின் இந்த உடனடியாக நடவடிக்கையால் அவரை மின்னலை விட வேகமானவர் என்று புகழ்ந்து பேசியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம் மற்றும் எழும்பூர் திமுக இளைஞரணி சார்பாக புரசைவாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சென்னை மேயர் பிரியா, அமைச்சர் பிகே சேகர்பாபு, நடிகர் மயில்சாமி, எம்எஸ் பாஸ்கர், திரைப்பட இயக்குனர் சுசி கணேசன், திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் ஆர்.கே. செல்வமணி, ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற உறுப்பினரும் நடிகையுமான ரோஜா ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை ரோஜா, “எனக்கு தாய் வீடு ஆந்திரா என்றால் மாமியார் வீடு தமிழ்நாடு என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதற்கு இரண்டு பேர் காரணம். ஒன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மற்றொருவர் அமைச்சர் சேகர்பாபு. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவின் போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் அண்ணன், தம்பி உறவு போல் நினைத்து மேடையை அலங்கரித்தார். மேலும் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுடைய தேவை என்ன ? என்பதை புரிந்து கொண்டு மின்னல் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் மக்களுக்கு செய்யும் இந்த நல்ல திட்டங்களால் இன்னும் 30 ஆண்டுகள் அவர் நிச்சயமாக தமிழகத்தின் முதலமைச்சராக இருப்பார்” என்று நடிகை ரோஜா கூறியுள்ளார்.