• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் விரைவில் ஆலோசனை..

Byகாயத்ரி

Feb 28, 2022

தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா 3-வது அலை வேகமாக பரவியது. அதனை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு கடந்த ஜனவரி மாதம் கடைபிடிக்கப்பட்டது. இதனால் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது.

இதையடுத்து கொரோனா பரவல் குறைந்து வந்ததன் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி மாத இறுதியில் இரவு நேர ஊரடங்கை ரத்து செய்தார். மேலும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 1-12ம் வகுப்பு வரை பள்ளிகள் & கல்லூரிகளை திறக்கவும் உத்தரவிட்டார். அதேபோல் மார்ச் 2-ஆம் தேதி வரை இந்த தளர்வுகள் அமலில் இருக்கும் என்று அறிவித்தார். இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மார்ச் 2-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளார்.