• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பெரியார் வேடமிட்ட குழந்தைகளை மிரட்டிய ஆசாமி கைது!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெரியார் வேடமிட்ட குழந்தையை அச்சுறுத்தும் விதமாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ் பாபு என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான நிகழ்ச்சியில் பெரியார் வரலாற்றை சித்தரிக்கும் விதமாக குழந்தைகள் பங்கேற்ற நாடகம் வெளியானது.

அதில் பெரியார் வேடமிட்ட குழந்தை பேசிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதனைத் தொடர்ந்து அந்த நாடகத்தில் பங்கேற்ற குழந்தைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து கோவில்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ் பாபு என்பவர் பெரியார் வேடமிட்ட குழந்தையை அச்சுறுத்தும் வகையில் வன்முறை நிறைந்த கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதற்கு பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும் வெங்கடேஷ் பாபுவை கைது செய்து சிறையிலடைக்கவும் வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து வன்முறை கருத்துக்களை பதிவிட்ட வெங்கடேஷ் பாபுவைக் கைது செய்த காவல்துறை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையிலடைத்தது.