• Mon. Dec 1st, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தூத்துக்குடியில் ரயில் மோதி கொத்தனார் பரிதாப சாவு…

Byadmin

Jul 16, 2021

தூத்துக்குடியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள நயினார்புரம், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பொன் முத்தையா மகன் பாலமுருகன் (42), இவருக்கு காது கேட்காது, வாய் பேச முடியாது.  கொத்தனாராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று தூத்துக்குடி புதியபேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமண விழாவிற்கு வந்துள்ளார்.

திருமனம் முடிந்த பின்னர் பாலமுருகன், கே.வி.கே. நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலத்தின் கீழ் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட ரயில் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெ்கடர் பெருமாள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.