• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கடைசி விவசாயி மணிகண்டனை தேடிப் போன மிஷ்கின்!

காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த படம் கடைசி விவசாயி. அந்தப் படத்தை பார்த்த மிஷ்கின் இயக்குநர் மணிகண்டனைச் சந்திப்பதற்காக மணிகண்டனின் சொந்த ஊரான உசிலம்பட்டிக்குச் சென்றதாக கூறியதுடன் அதைப் பற்றிய பதிவு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

கடைசி விவசாயி தந்த மகா கலைஞனான மணிகண்டனை அவன் ஊரான உசிலம்பட்டிக்குச் சென்று சந்தித்தேன். ஆரத் தழுவினேன். மிகச் சிறந்த படைப்பைத் தமிழுக்குத் தந்த அவனுக்கு நன்றி கூறி, அவன் கரங்களை முத்தமிட்டேன்.

படத்தின் கதையின் நாயகனாக, ஒட்டுமொத்த இந்தியாவின் எல்லா விவசாயிகளின் அடையாளமாக வாழ்ந்த பெரியவரின் வீட்டுக்குச் சென்று அவர் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினேன். மணிகண்டன் படப்பிடிப்பு செய்த இடத்திற்குச் சென்று மதிய உணவு உண்டோம். இந்த முழு நாளும் ஒரு அற்புத நாளாக மாறியது. மணிகண்டா, உன் பயணம் தொடரட்டும். உன்னை இயற்கை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்” என இயக்குநர் மிஷ்கின் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.