• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சோட்டானிக்கரை கோயிலில் காதலருடன் நயன்!

புத்தாண்டை வெளிநாடுகளில் கொண்டாடிய நயன் மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் இருவரும் கேரளாவில் உள்ள சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகின்றன.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கடந்த பிப்ரவரி 14ம் தேதி நடந்த காதலர் தினக் கொண்டாட்டத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் செம ஸ்பெஷலாக கொண்டாடினர். அதன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்ட் ஆனது@

தெலுங்கில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் காட் ஃபாதர் படத்தில் நடித்து வரும் நயன்தாரா கேரளாவில் உள்ள சோட்டானிக்கரை பகவதியம்மன் கோயிலில் தனது காதலர் விக்னேஷ் சிவன் உடன் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

இருவரும் திடீரென பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ள நிலையில், விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்கிற வேண்டுதலா? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கும் போதெல்லாம் கோயிலுக்கு சென்று வேண்டிக் கொள்வதை பழக்கமாக வைத்து வருகிறார் நயன்தாரா என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.