• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காதலர் தினத்தில் ஐஸ்வர்யாவின் அப்டேட்!

நடிகர் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இருமகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் அண்மையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற போவதாக தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்தனர்.

இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தனுஷ் தனது பட சூட்டிங்கிலும், ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் தயாரிக்கும் பணியிலும் பிஸியாக இருந்து வந்தனர். ஐஸ்வர்யா காதலர் தினத்தை முன்னிட்டு ரொமாண்டிக் பாடல் ஒன்றை தயாரிக்கும் பணியில் இறங்கினார்.

அன்கித் திவாரி இசையமைத்துள்ள முசாபிர் பாடல் பல மொழிகளில் தயாராகிறது. இதனை தெலுங்கில் சாகரும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த் மற்றும் தமிழில் அனிருத்தும் பாடுகின்றனர். இந்த பாடலின் புரோமோ வீடியோவை காதலர் தினமான நேற்று ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.