• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வலிமை புரமோஷனுக்கு பயன்படுத்தப்படும் புகைப்படங்கள்

அஜித்குமார் – இயக்குனர் வினோத் – தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து உள்ள படம் ‛வலிமை’. ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் கொரோனா பிரச்னையால் இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் தாமதமாகி வந்த வலிமை பொங்கலுக்கு வெளியாக இருந்தது.அண்ணாத்தேயுடன் போட்டிபோட வேண்டாம் என்பதால் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாலும், 100% இருக்கை அனுமதிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதால் பிப்ரவரி24 அன்று வலிமைா ரீலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ் தவிர பிற மொழிகளில் அஜீத்குமார் நடித்த படங்கள் டப்பிங் செய்யப்படுவது இல்லை
முதல்முறையாக தெலுங்கு, இந்தி, கன்னடம் மொழிகளில் இந்த படம் ஒரே நேரத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரீலீஸ் ஆகஉள்ளது. இந்த படத்தின் பாடல்கள், டிரைலர்கள் ஏற்கனவே வெளியாகிவரவேற்பை பெற்றுள்ள நிலையில் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. படத்திற்கு தயாரிப்பு தரப்பில் இருந்து எந்தவிதமான புரமோஷன் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை இருந்தபோதிலும் படப்பிடிப்பு, படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் தயாரிப்பாளர், இயக்குனர் தரப்பில் வெளியிட்டு பரபரப்பாக்கி வருகின்றனர்
இந்நிலையில் இயக்குனர் வினோத், நடிகர் அஜித்குமார் மற்றும் சவுண்ட் இன்ஜினியர் ஆகியோர் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. வலிமை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றபோது எடுத்த புகைப்படம் இது மற்ற தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை புரமோஷன் மெனக்கெட்டுவேலை செய்து வருகின்றனர் ஆனால் அஜீத் படத்திற்கு இது போன்ற முயற்சிகள் தயாரிப்பாளர், மற்றும் டிரைலர், பாடல் காட்சிகள், அஜீத்குமார் படப்பிடிப்புக்கு வந்த போன நிகழ்வுகளின் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு அவ்வப்போது வலிமை பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது படக்குழு.