• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோவையின் காவல் தெய்வ தேர்த் திருவிழா..

Byகாயத்ரி

Feb 10, 2022

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேரோட்ட நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தேர்த்திருவிழா வருகிற 14ஆம் தேதி (திங்கட்கிழமை) முகூர்த்தக்கால் நடும் விழாவுடன் தொடங்குகிறது.

இதனை தொடர்ந்து 15ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு பூச்சாட்டு விழாவுடன் தேர்த்திருவிழா நடக்கிறது. 21ஆம் தேதி கிராம சாந்தி, 22ஆம் தேதி கொடியேற்றமும், இரவு 7.30 மணிக்கு அக்னிசாட்டு விழா நடக்கிறது.23ஆம் தேதி புலி வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், 24ஆம் தேதி கிளி வாகனம், 25ஆம் தேதி சிம்ம வாகனம், 26ஆம் தேதி அன்னவாகனம், 27ஆம் தேதி காமதேனு வாகனத்திலும், 28ஆம் தேதி வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கிறது. மார்ச் 1ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 2ஆம் தேதி மதியம் 2.05 மணிக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜவீதி தேர்திடலில் இருந்து புறப்படும் தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் திடலை அடையும்.இதனை தொடர்ந்து மார்ச் 3ஆம் தேதி பரிவேட்டை, குதிரைவாகன உலா, 4ஆம் தேதி தெப்ப உற்சவமும், 5ஆம் தேதி தீர்த்தவாரி, கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது. மேலும் மார்ச் 6ஆம் தேதி நடக்கும் வசந்த விழாவுடன் தேர்திருவிழா நிறை வடைகிறது.கொரோனா விதி முறைகளை கடை பிடித்து தேர்திருவிழா நடத்தப்படுகிறது.