மூன்று வருடங்களுக்கு முன்பு ஹன்சிகா மேத்வானி நடிப்பில் வெளியான படம் 100 என்கிற படம் அதற்கு முன்பாகவும், பின்பும் நடித்ததாக கூறப்படும்மஹா படம் இன்னும் வெளிவரவில்லை. தற்போது இந்தி மற்றும் பிற மொழி படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா மேத்வானி
இந்த நிலையில் அவர் புதிய தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சிலம்பரசன்நடித்த ‘வாலு’, விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ‘சங்கத்தமிழன்’ ஆகிய படங்களை இயக்கியவர் விஜய் சந்தர் இவர் தயாரிப்பில் கதையின் நாயகியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். விஜய்சந்தர் நடித்த வாலு படத்தில் ஹன்சிகா நடித்திருந்தார். அந்த நட்பின் அடிப்படையில் தான் தயாரிக்கும் படத்தில் ஹன்சிகாவை நடிக்க வைக்கிறார் விஜய் சந்தர் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்
இந்தப் படத்தை கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து, நடித்துள்ள ‘கூகுள் குட்டப்பா’ படத்தை இயக்கிய இரட்டையர்களில் ஒருவரான சரவணன் இயக்கவுள்ளார். இது ஹீரோயின் சப்ஜெக்ட் கதை. படத்தை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.












; ?>)
; ?>)
; ?>)