• Tue. Apr 30th, 2024

பா.ஜ.க.வை கடலில் வீச வேண்டும்…

Byகாயத்ரி

Feb 2, 2022

பா.ஜ.க.வை தூக்கி வங்கக்கடலில் எறிய வேண்டும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேச்சு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

பாராளுமன்றத்தில் 2022-2023 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறித்து அதிருப்தி அடைந்துள்ள சந்திரசேகர ராவ் பா.ஜ.க.வை அதிகாரத்தில் இருந்து விளக்கி வங்கக் கடலில் தூக்கி எறிய வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்.

பா.ஜ.க என்ன செய்தாலும் அமைதியாக உட்கார்ந்து நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். நாட்டுக்கு எது நல்லதோ, எது நன்மையோ, எது தேவையோ, அதை கண்டிப்பாக செய்வோம். நம் பிரதமர் மிகுவும் குறுகிய பார்வை கொண்டவராக இருக்கிறார்.இந்திய நாட்டின் தலைமையை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் சந்திரசேகர ராவ் மும்பைக்கு சென்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவை சந்தித்து பேசப்போவதாகவும் கூறியுள்ளார்.

தான் இந்த தேசத்தை நம்புவதாகவும், தேசத்திற்கு எதாவது தேவையென்றால் அது எதிர்வினையாற்றும். இப்போது தலைமையின் மாற்றத்திற்கான தேவை வந்திருக்கிறது. நம் நாட்டிற்கு ஒரு புரட்சி தேவையாக இருக்கிறது. நாம் சண்டையிட்டால் தான் மாற்றத்தை காண முடியும். சிங்கப்பூர் அரசிடம் எதுவும் இல்லை ஆனால் மூளை இருக்கிறது. நம் அரசிடம் எல்லாம் இருந்தும் மூளை மட்டும் இல்லை தடலாடியாக கூறினார்.நம் அரசியலமைப்பு சட்டத்தை வலுப்படுத்த வேண்டும். இந்தியாவில் பட்டியலனத்தவர்களும், பழங்குடியினரும் புறக்கணிக்கப்படுகின்றனர். பா.ஜ.க அரசு மக்களை கண்களை மறைத்து மோசமாக ஏமாற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *