• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

காணொலி வாயிலாக பிரச்சாரத்தில் இறங்கும் திமுக

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, வேட்பாளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது நிலவும் நோய் தொற்று பரவல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுவது.