• Sun. May 5th, 2024

திமுக ஆட்சி அமைத்து 100 நாட்கள்… மதுரையில் காசிமாயன் தலைமையில் களைக்கட்டிய கொண்டாட்டம்…!

By

Aug 14, 2021

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. ஆவின் பால் விலை குறைப்பு, அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை, மாணவர்களின் பாடச்சுமை குறைப்பு, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டம், கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் என சாதனை திட்டங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

முதல்வருக்கான தனிச்செயலாளர்கள் நியமனம் முதல் பாடநூல் கழக தலைவராக லியோனியை நியமித்தது வரை சரியான நபர்களின் கையில், சரியான துறையை ஒப்படைத்ததாக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது. காவலர்களுக்கு வாரந்தோறும் காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு, பெண் காவலர்கள் சாலையோர பாதுகாப்பு பணிக்கு நிற்கத்தேவையில்லை என அனைத்து துறை ஊழியர்களையும் மனம் குளிரவைக்கும் அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கியது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போட்ட வழக்குகள் வாபஸ், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து கட்டி முடிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம், ராஜராஜ சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் பிறப்பித்த அதிரடி அறிவிப்புக்கள் தான் எத்தனை.

வெள்ளை அறிக்கை, காகிதமில்லா பட்ஜெட், வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் என பிற மாநில முதல்வர்களையே ஸ்டாலின் வியத்தகு வகையில் உற்று நோக்க வைத்து வருகிறார். இப்படி ஆட்சிக்கு வந்து 100 நாட்களிலேயே தளபதியார் செய்த இத்தனை சாதனைகளையும், அதிரடி திட்டங்களையும் நிறைவேற்றி வருவதை திமுகவின் உடன்பிறப்புக்கள் கொண்டாடாமல் இருக்க முடியுமா?. தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் முதல்வராக பொறுப்பேற்று 100 நாட்களில் ஸ்டாலின் செய்துள்ள சாதனைகளை கொண்டாடி வருகின்றனர்.

மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறனின் வழிகாட்டுதலின் படி, 97வது வட்ட செயலாளர் மு.காசிமாயன் அவர்கள் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் பாலாஜி திமுக கொடியை ஏற்றி வைத்து, திமுக ஆட்சி அமைத்து 100 நாட்கள் சிறப்பாக வழி நடத்தி வருவதை கொண்டாடினர். பகுதி செயலாளர் சிவா அப்பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் திருநகர் பேரூராட்சி தலைவர் இந்திரா காந்தி மற்றும் 97வது வட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *