• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அம்மா பிறந்தநாளை அருகில் இருந்து கொண்டாட முடியாத மெகா ஸ்டார்

தனது தாயின் பிறந்த நாளுக்கு நடிகர் சிரஞ்சீவி தெரிவித்த வாழ்த்து, சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் நெகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில்பகிரப்பட்டு செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்குநடிகர் சிரஞ்சீவிதன்னை வீட்டில்தனிமைபடுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் இந்நிலையில் தனது தாயின் பிறந்த நாளையொட்டி, வாழ்த்தையும், புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். ‘குவாரன்டையினில் இருப்பதால் உங்களை மிஸ் செய்கிறேன் அம்மா’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும், தனது மனைவி மற்றும் தாயுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.இது தொடர்பாக பதிவிட்டுள்ள சிரஞ்சீவி, ”பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா!. நான் குவாரன்டைனில் இருப்பதால் உங்களிடம் நேரடியாக என்னால் ஆசீர்வாதம் வாங்க முடியவில்லை. அதனால் என்னுடைய வாழ்த்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். எனது இந்த பிறவியில் மட்டுமல்லாமல், அடுத்த பிறவியிலும் உங்கள் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என நான் இறைவனிடம் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் உங்கள் “சங்கர் பாபு” என பதிவிட்டுள்ளார்.ஒவ்வொரு வருடமும், சகோதரர்பவன் கல்யாண், நாக பாபு உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பமும் சிரஞ்சீவி அம்மாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு சிரஞ்சீவி கொரோனா தொற்று காரணமாகவீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், கொண்டாட்டங்கள் இல்லை என்கிறது சிரஞ்சீவி வட்டாரம்.