• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஸ்ருதிஹாசன் பிறந்தநாளை கொண்டாடிய சலார் படக்குழு

கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் இயக்குநர் பிரஷாந்த் நீல். இவரது இயக்கத்தில் யஷ் நடித்துள்ள கேஜிஎஃப் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல்மாதம்திரைக்குவரவிருக்கிறது.

அந்தப் படத்தின்இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது பிரபாஸ் நாயகனாக நடிக்கும் சலார் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார்.
இன்றுஸ்ருதி ஹாசனின் பிறந்த நாள் அதனையொட்டி படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ஸ்ருதிஹாசனை கௌரவப்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் ஆத்யா என்ற வேடத்தில் நடிப்பதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஹோம்பேல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு படத்தின் நாயகன்பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக, ”படப்பிடிப்பு தளத்தில் சுறுசுறுப்பானவரும் எனது கதாநாயகி, பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.