• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

ஹன்சிகா மோத்வானியின் ஐம்பதாவது படம் திரையரங்குகளில்

எக்ஸ்ட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள படம் மஹா. ஹன்ஷிகா மோத்வானி கதைநாயகியாக நடித்துள்ளார். இது அவருக்கு 50வது படம். சிலம்பரசன் கவுரவ பாத்திரமொன்றில் நடித்திருக்கிறார் ஶ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா,
பேபி மானஸ்வி உள்பட பலர் நடித்துள்ளனர். யு.ஆர்.ஜமீல் இயக்கி உள்ளார்.இந்த படம் தயாராகி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும் இன்னும் வெளியாகவில்லை.
பைனான்ஸ் பிரச்சினை காரணங்களால் படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் படம் தியேட்டரில்தான் வெளிவரும். வெளியீட்டு உரிமமும் விற்கப்பட்டு விட்டது. என்று தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

ரசிகர்களிடம் விஷுவல் புரமோக்களின் மூலம், படம்
பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் உள்ள நிலையில், இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை, ஆன்ஸ்கை நிறுவனம் பெற்றுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது