• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மறைக்க நினைக்கும் வரலாற்றினை பேணிக்காக்கும் இயக்கம்!

கன்னியாகுமரியில், வே. சுரேந்திரன்
மக்களாட்சி பாதுகாப்போம் தேசிய பிரச்சார இயக்கத்தை நாடு முழுவதும் நடத்துவதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முடிவு செய்துள்ளது என்றார்..

பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில்,  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான பிரச்சாரத்தை இம்மாதம் 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சியாக இம்மாதம் 26ஆம் தேதி  நாகர்கோவிலில் இதன் துவக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாறு திட்டமிட்டு தற்போதைய ஆளும் ஒன்றிய அரசு மறைப்பதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் சூழலில் இவர்கள் மறக்க நினைக்கும் வரலாறுகளை இந்திய தேசம் என்றும் கொண்டு சேர்க்கவும் சுதந்திர இந்தியாவின் மாண்புகளை பேணிப் பாதுகாப்பதும் இந்த பிரச்சார இயக்கத்தின் நோக்கமாகும். இந்த நாட்டில்  சொந்த மக்களுக்கு பாதுகாப்பு இல்லை சொந்த நாட்டிலேயே  நாட்டு மக்களை இனப்படுகொலை செய்யும் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகள்  மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இது மக்கள் ஆட்சியா அல்லது பாசிச ஆட்சியா என்ற நிலை உள்ளது. கலவரம் நடத்தியவர்கள் மீது வழக்கு தொடராமல் அதனால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க செல்லும் சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.  பாலியல் வன்முறை செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை . அவர்களுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகிறது.   அரசியல் சாசன சட்டத்தை ஒழிக்கும் நிலையில் இன்று ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த மக்களாட்சி பாதுகாப்போம் என்ற பிரசார இயக்கத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னெடுத்துள்ளது, என்றார்..

இந்த பேட்டியின் போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், மாநிலச் செயலாளர் முஹம்மது ரசின், நெல்லை மண்டல தலைவர் திப்புசுல்தான், குமரி மாவட்ட தலைவர் முகமது ஜிஸ்தி, அப்துல்  சத்தார் ஆகியோர் உடனிருந்தனர்