• Thu. Feb 26th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

மயிலாடுதுறையில் எம்ஜிஆரின் 105-வது பிறந்தநாள் விழா!

மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105-வது பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் உற்சாகமாகக் கொண்டாடினர். இதையொட்டி, மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி பகுதியில், எம்ஜிஆரின் உருவப்படத்துக்கு, அதிமுக மாவட்டட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பவுன்ராஜ் மாலை அணிவித்தார். இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் ராதாகிருஷ்ணன், சக்தி உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பட்டாசு வெடித்து, பயணிகள், பொதுமக்கள், வர்த்தகர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.